horso by Themebuzz
  • imtcuk@mail.com
  • +44 7939474342
  • 16 Danethorpe Road Wembley Middlesex UK HA0 4RQ

Pope Francis Died – 21.04.2025

போப் பிரான்சிஸ் காலமானார்!

போப்பின் உடல்நிலை குறைபாடுகள்
2013ஆம் ஆண்டு முதல் போப்பாக பதவி வகித்து வந்த பிரான்சிஸ், அண்மைக்காலங்களில் இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் சிறுநீரகச் செயலிழப்பு தொடர்பான அறிகுறிகளும் அவரை எதிர்கொண்டன. கடந்த பிப்ரவரி மாதம் அவர் மிகவும் மோசமான நிலைக்கு சென்றபோது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சீராகிய பிறகு, அவர் மீண்டும் பொது பணிகளில் ஈடுபட்டிருந்தார். ஈஸ்டர் திருநாளில் அவர் நேரில் திருந்தியோர்களை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவிப்பு மற்றும் வாடிகனின் வழிகாட்டல்:
போப்பின் மரணம் உறுதி செய்யப்பட்டதும், வாடிகன் அதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்தது. போப்பின் மரணத்திற்கு பிறகு, வாடிகனில் பல பாரம்பரிய நடைமுறைகள் தொடங்கப்படும். இதில் முதன்மையாக இடம்பெறும் ஒன்று interregnum எனப்படும் இடைக்கால ஆட்சி. இது புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் வரை நடைபெறும்.

மரண உறுதிப்பத்திரம் – ஒரு பாரம்பரிய முறைகள் கலந்த நிகழ்வு:
போப்பின் மரணத்தை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும் பொறுப்பு வாடிகன் நகரின் வருவாய் நிர்வாகியிடம் உள்ளது. அவர், போப்பின் அருகே சென்று மூன்று முறை அவரது பெயரை அழைக்க வேண்டும். பதில் வரவில்லை என்றால் மரணம் உறுதி செய்யப்படும். இந்நேரம் பழங்காலத்தில் நடைமுறையாக இருந்த ‘நெற்றியில் வெள்ளிச் சுத்தியல் தட்டுதல்’ என்பது தற்போது முற்றாக கைவிடப்பட்டுள்ளது.

போப்பின் இறுதிச் சடங்கு:
போப்பின் மரணம் உலகின் அனைத்து தேவாலயங்களுக்கும் அறிவிக்கப்படும். இதையடுத்து தேவாலயங்கள் துக்க சின்னமாக மணிகளை ஒலிக்கச் செய்யும். போப்பின் அதிகாரத்தைக் குறிக்கும் மோதிரம் மற்றும் முத்திரை அழிக்கப்படும். இது அவரது காலம் முடிந்ததைக் குறிக்கும் முக்கிய நிகழ்வாகும்.

போப்பின் இறுதி அஞ்சலி விழா, அவர் உயிரிழந்த 4 முதல் 6 நாட்களுக்குள் நடத்தப்படும். உலகின் அனைத்து தேவாலயங்களிலும் 9 நாட்கள் துக்கதினங்களாக அனுசரிக்கப்படும். பொதுவாக, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் அவருக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த நிகழ்வு உலகத்தின் மூலையில் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க விசுவாசிகள் மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து மதங்களிலும், அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் இடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தும். போப் பிரான்சிஸின் வாழ்க்கையும், பணியாற்றிய விதியும், அவரின் பண்பாடுமிக்க வழிகாட்டுதலும் நீண்ட காலம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பது நிச்சயம்.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus ullam corper mattis, pulvinar dapibus leo.

Promoting Tamil language

Tamil history and cultural

IMTC was founded to create a greater awareness of Tamil history and rich Tamil cultural by organising the cultural events and promoting Tamil language. IMTC has proved that it possesses the necessary knowledge, experience and vision to promote the Tamil culture in India, Sri Lanka and abroad.

About Us

Get in Touch

Our Location